புதுடில்லி : மத்திய அரசு துறைகளில், ஒருவர் உயர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன், தன் அசையா சொத்து விபரங்களை லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் வழங்கி, அதன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரிகள் ஆண்டுதோறும் ஜன., 31க்குள், தங்களின் அசையா சொத்து விபரங்களை, லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். ஆணையம், அந்த விபரங்களை சரிபார்த்து, உயர் பதவி நியமனங்களுக்கு தடையில்லா சான்று அளிக்கும். ‘இந்த சான்று உள்ள அதிகாரிகளை மட்டுமே, மத்திய அமைச்சகங்கள் உயர் பதவிகளுக்கு நியமனம் செய்ய முடியும்’ என, ஊழல் ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது, மத்திய அமைச்சகங்கள் நினைத்தால், இந்த சான்று இல்லாதவரை கூட உயர் பதவிக்கு நியமிக்கலாம்.
புதுடில்லி : மத்திய அரசு துறைகளில், ஒருவர் உயர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன், தன் அசையா சொத்து விபரங்களை லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் வழங்கி, அதன் அனுமதி பெறுவது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.