அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் – மாநில அரசு அதிரடி ஆக்‌ஷன்!

அலுவலகங்களுக்கு தாமதமாக வந்த அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடித்து மாநில அரசு வழங்கி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின்
நவி மும்பை
மாநகராட்சி நிர்வாகத்தில்,
அரசு ஊழியர்கள்
தாமதமாக பணிக்கு வருவதாக புகார் வந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் இரண்டு முறை நடத்தப்பட்ட திடீர் சோதனையில், ஊழியர்கள் பலர் தாமதமாக வருவது உறுதியாகியது.

இந்நிலையில், நவி மும்பை மாநகராட்சி கமிஷனர் அபிஜித் பங்கர், கடந்த பிப்ரவரி மாதம் 17 – 24 வரையிலான நாட்களில், அலுவலகங்களில் வருகைப் பதிவை திடீரென்று ஆய்வு செய்தார். அதில் பல பணியாளர்கள் உரிய நேரத்தில் அலுவலகத்திற்கு வராததைக் கண்டறிந்தார். இது தொடர்பாக பல முறை எச்சரிக்கை விடப்பட்டும் அரசு ஊழியர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வராதது, கமிஷனர் அபிஜித் பங்கர் கவனத்திற்கு வந்தது.

நாளை பொது விடுமுறை – பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு!

இதை அடுத்து அலுவலகங்களில் பணிக்கு தாமதமாக வந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கமிஷனர் அபிஜித் பங்கர் உத்தரவிட்டார். அதன்படி எந்தெந்த நாட்களில் பணிக்கு தாமதமாக வந்தார்களோ அந்தந்த நாட்களில் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது.

மொத்தம் 165 அதிகாரிகள் மீது முறையற்ற வருகைக்காக ஒரு நாள்
சம்பளம்
பிடித்தம் செய்யப்பட்டது. 2 நாட்கள் தாமதமாக வந்த 22 ஊழியர்களுக்கு 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. 3 நாட்கள் தாமதமாக வந்த 4 ஊழியர்களுக்கு 3 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து தாமதமாக பணிக்கு வந்ததற்காக அவர்கள் பணியிட மாற்றமும் செய்யப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.