உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், சர்வதேச அளவில் சப்ளை சங்கிலியில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல அத்தியாவசிய பொருட்கள், உலோகங்கள் என பல பொருட்களின் விலை வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டுள்ளது.
இதற்கிடையில் பணவீக்க விகிதமானது 6- 8 மாதங்களில் மீண்டும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்திற்கு சூப்பர் தள்ளுபடி.. 6 ஆண்டுகளில் இல்லாதளவு உச்சம்.. ஜாக்பாட் தான்!
இந்த பணவீகக்த்தினை கட்டுக்குள் கொண்டு வர அரசு கலால் வரியினை குறைத்தால், அது வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கும். இதுவும் நாட்டின் வளர்ச்சியினை பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு
சமீபத்தில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தினை சமீபத்தில் 8.2%ல் இருந்து, 7.9% ஆக குறைத்தது நினைவுகூறத்தக்கது. அதேபோல நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.3% ஆக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது. தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றமானது, மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பணவீக்கத்தினை ஊக்கப்படுத்தலாம்.
இலக்கினை தாண்டிய பணவீக்கம்
கடந்த ஜனவரி மாதத்திலேயே பணவீக்க விகிதமானது 7 மாதத்தில் இல்லாத அளவுக்கு 6.01% ஆக அதிகரித்தது. இது ரிசர்வ் வங்கியின் இலக்கினையும் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சமீபத்தில் விலை உயர்வு தான் பணவீக்கத்திற்கு காரணம் என்று கூறியிருந்தாலும், உக்ரைன் போர், அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல காரணிகளும் இதில் மாற்றம் செய்யலாம்.
பாதிப்பின் மதிப்பு
ஆய்வறிக்கையின் படி 10% கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பானது, பணவீக்கத்தில் 40 அடிப்படை புள்ளிகளை தூண்டலாம். நிதி பற்றாக்குறையை 30 அடிப்படை புள்ளிகளை தூண்டலம். ஜிடிபியில் 20 அடிப்படை புள்ளிகள் வளர்ச்சியினை குறைக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பணவாட்டம்
ஐரோப்பாவின் அரசியல் பிரச்சனைகள், ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் மீடியம் டெர்மில் பணவீக்கத்தினை குறைய விடாது. பிரச்சனை என்னவெனில் இந்தியாவின் பொருளாதாரம் ஏற்கனவே தேவையுடன் போராடி வருகின்றது. ஆக பணவாட்டம் ஒட்டுமொத்த தேவையிலும் பாதிப்பினை ஏற்படுத்தலாம். இது வளர்ச்சியினை பாதிக்கலாம்.
சந்தையில் பாதிப்பு
ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையானது சர்வதேச கமாடிட்டிகளின் விலையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில் சப்ளை செய்யப்படும் நிக்கலில், 10% ரஷ்யா சப்ளை செய்கிறது. இதே உக்ரைனுடன் சேர்ந்து உலகளாவிய கோதுமை ஏற்றுமதியில் 29% செய்கிறது. இதே பல்லேடியம், இயற்கை எரிவாயு, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றையும் பெரியளவில் ஏற்றுமதி செய்து வருகின்றது. இதன் காரணமாக மார்ச் 4 அன்று 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிக்கல் விலை அதிகரித்துள்ளது.
இதே தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 2000 டாலர்களை எட்டியது. இதே இந்திய சந்தையிலும் 55,128 ரூபாயினை எட்டியது.
முக்கிய காரணிகள்
இதற்கிடையில் பத்திர சந்தையின் போக்கு, பணவீக்க புள்ளி விவரங்கள், அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை, ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் பெரு நிறுவனங்களின் லாபத்தினை குறைக்கலாம். எனினும் நீண்டகால கணிப்புகள் சந்தைக்கு சாதகமாக உள்ளன.
4 முக்கிய துறைகள்
தற்போது நிபுணர்கள் பங்குகளை வாங்க பரிந்துரை செய்து வருகின்றது. ஆக இது வாங்க சரியான நேரமாகவும் இருக்கலாம். குறிப்பாக சில துறை பங்குகள் நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐடி துறை, நிதித்துறை, கேப்பிட்டல் குட்ஸ், விவசாயம் என பலவும் நல்ல வளர்ச்சி காணலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஐடி & விவசாய துறை
இதில் ஐடி துறையானது உக்ரைன் – ரஷ்யா இடையேயானது பிரச்சனைகளுக்கு மத்தியில், இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே விவசாயத் துறையில் வளர்ச்சி மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரஷ்யா , உக்ரைன் வணிகம் தடை பட்டுள்ள நிலையில், சப்ளை சங்கிலியிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய விவசாய பொருட்களுக்கு தேவவையை கூட்டலாம். இது வளர்ச்சி விகிதம் மேம்பட முக்கிய காரணமாகவும் அமையலாம்.
ஆட்டோமொபைல் துறைக்கு சறுக்கல்
அதேசமயம் ஆட்டோமொபைல் துறையானது சற்று சரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து செமிகண்டக்டர், பல்லேடியம் உள்ளிட்ட மூலதன பொருட்கள் பற்றாக்குறைக்கு மத்தியில் சரிவினைக் காணலாம் என கூறப்படுகிறது.
Russia – Ukraine issue push up opportunities in investors in 4 key sectors
Russia – Ukraine issue push up opportunities in investors in 4 key sectors/இதை கவனிச்சீங்களா.. ரஷ்யா – உக்ரைன் போர் கொடுத்த சூப்பர் வாய்ப்பு.. அதுவும் 4 துறைகளில்!