கட்டார் அரசின் தூதுவர் மாண்புமிகு ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி. அல்-சொரூர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 21ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, மனித உரிமைகள் பேரவையில் கட்டார் நல்கிய வலுவான ஆதரவையும் இலங்கைக்கான பச்சாதாப அணுகுமுறையையும் பாராட்டிய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கையில் நடைபெற்று வரும் நல்லிணக்கம் சார்ந்த முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பு, உறுதியான நட்புறவு மற்றும் பன்முக உறவுகளை வலுப்படுத்துவதற்கு அமைச்சர் பீரிஸ் மேலும் உறுதியளித்தார்.
இரு நாட்டு மக்களினதும் நலனுக்காக இலங்கையுடன் வலுவான பொருளாதார பங்காளித்துவத்தையும் நட்புறவையும் மேம்படுத்துவதற்கு கட்டார் உறுதியளிப்பதாக தூதுவர் சொரூர் உறுதியளித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 மார்ச் 22