இலங்கையில் எரிபொருள் விற்பனை நிலையங்களில் ராணுவ வீரர்களை பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன. எரிபொருள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த 3 முதியவர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு எரிபொருள் விற்பனை நிலையத்திலும் குறைந்தது 2 ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.