கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் காவிலிபாளையம் பகுதியில் 7 மெகா வாட் சோலார் மின் உற்பத்தி நிலையம் துவக்க விழா நடைபெற்றது. இந்த சோலார் மின் உற்பத்தி நிலையத்தை மில்கி மிஸ்ட் நிர்வாக இயக்குனர் சதிஸ்குமார் துவக்கி வைத்தார். இதில் தலைமை அதிகாரி டாக்டர் ரத்தினம் அனிதாசதீஸ்குமார் மற்றும் மில்கி மிஸ்ட் கம்பெனி உழியர்கள் கலந்துகொண்டனர்.
காவிலிபாளையம் பகுதியில் 20 ஏக்கரில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் வகையில் 17,424 சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது. பேனல்களால் உருவாக்கப்படும் அதிகப்படியான ஆற்றலை சேமித்து வைக்க இரண்டு இன்வெர்டர் அமைக்கபட்டுள்ளன
இதில் ஒன்று 4 மெகா வாட் சூரிய மின் சக்தியை சேமிக்கும் வகையிலும், ஒன்று 3 மெகா வாட் சூரிய மின் சக்தியை சேமிக்கும் வகையிலும் அமைக்கபட்டுள்ளன, இதன் மூலம் நாளொன்றிற்கு சுமார் 35 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி செய்யும் வகையில் இந்த சோலார் மின் உற்பத்தி நிலையம் அமையபட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM