உக்ரைன் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நன்கொடையளிக்கப்பட்ட பொருட்கள் பிரித்தானியாவில் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை Lancashire, Chorley-ல் உள்ள கிடங்கில் நன்கொடை பொருட்களுடன் இருந்து வெள்ளை நிற மெர்சிடிஸ் வேன் திருடிச் செல்லப்பட்டதாக தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த வேனிற்கு 20,000 பவுண்டுக்கு மேல் செலுத்தியதாக தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிசிடிவி காட்சிகளில், ஒரு சிறிய வெள்ளை வேனில் வந்த இருவர், 3 நிமிடங்களில் தங்கள் வாகனத்தை திருடிச் சென்று விட்டதாக தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் Rev Bernard Cocker கூறினார்.
கொளுந்துவிட்டு எரியும் ரஷ்ய எண்ணெய் கிடங்கு! வெளியான வீடியோ ஆதாரம்
ஆனால் நாங்கள் தோற்கடிக்கப்பட மாட்டோம், நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் உக்ரைனுக்குச் செல்லும் டிரக்குகளை நிரப்புவதற்கு உதவுகிறார்கள்.
இரண்டு நபர்கள் எங்களை வாகனத்தை திருடிச் சென்றது உண்மையில் வேதனையளிக்கிறது.
எங்களுடைய வாகனங்களில் ஒன்றைத் திருடிய இரண்டு நபர்களை பிடிபடுவார்கள் நிறுவனர் Rev Bernard Cocker கூறினார்.