ஜெனீவா:
உக்ரைன் மீது ரஷியா 27-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. கடுமையாக போர் நடந்துவருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.
போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் லட்சக்கணக்கானோர் குவிந்து இருக்கிறார்கள்.
இந்நிலையில், உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அகதிகளுக்கான ஐ.நா.சபை உயர் அதிகாரி கூறுகையில், உக்ரைனில் இருந்து இதுவரை 35 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இதில் 20 லட்சத்து 10 ஆயிரம் பேர் போலந்து சென்றதாகவும், 5,40,000 பேர் ரோமானியாவுக்கும், 3,67,000 பேர் மால்டோவாவுக்கும் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு நாடுகளிலும் உக்ரைன் அகதிகளின் வருகை கணிசமாக உள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு கூறியுள்ளது.
இதையும் படியுங்கள்…ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது: ஜோ பைடன்