தண்ணீரின் முக்கியத்துவத்தை அனைவரும் அறியும் வகையில் இன்று உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. புவி வெப்பமயமாதல், மழை அளவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு நாடுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அதனால், இருக்கும் தண்ணீரை தக்க வைத்துக் கொள்ளவும், மரங்களை வளர்க்கவும், மழை நீரை சேமிக்கவும் மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் சேமிக்க வேண்டும் என்பதை மீண்டும் உறுதி செய்வோம் என்று பிரதமர் மோடி உகல தண்ணீர் தினத்தன்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உலக தண்ணீர் தினத்தில் ஒவ்வொரு துளி நீரையும் சேமிப்பதற்கான உறுதிமொழியை நாம் மீண்டும் உறுதி செய்வோம். நமது குடிமக்களுக்கு தண்ணீர் பாதுகாப்பு மற்றும் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய ஜல் ஜீவன் மிஷன் போன்ற பல நடவடிக்கைகளை நமது தேசம் மேற்கொண்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதுமையான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் நீர் சேமிப்பு பெரிய அளவில் எடுத்து செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. தண்ணீரை சேமிக்க பாடுப்படும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளை நான் பாராட்ட விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்..
பஞ்சாயத்து துணைத் தலைவர் கொலை எதிரொலி: வீடுகளுக்கு தீ வைப்பு- ஏழு பேர் உயிரிழப்பு