விஜய் மல்லையா, நிரவ் மோடி, மொகுல் சோக்ஸி ஆகியோரிடம் இருந்து இதுவரையில் 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வங்கிக் கடன் ஊழலுக்கு பேர் போன விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோர், பஞ்சாப் வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகளில் கடனை வாங்கிவிட்டு, சொல்லாமல் கொள்ளாமல் நாட்டை விட்டு வெளியேறிவர்கள் ஆவர்.
ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய 3 புதிய ஏற்றுமதி வழிகள்.. உலக நாடுகளின் தடை வீணா..?!
இவர்களை எப்படியேனும் இந்தியா அழைத்து வர வேண்டும் என வங்கிகள் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. இது குறித்தான வழக்கும் நடந்து வருகின்றது. ஆனால் இதுவரையில் அந்த முயற்சியானது முயற்சியாகவே இருந்து வருகின்றது.
இவ்வளவு மோசடியா?
இன்று ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, இது குறித்த அறிக்கையினை சமர்பித்துள்ளார். அதில் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மொகுல் சோக்ஸி மூவரும் பொதுத்துறை வங்கியில், அவர்கள் சார்ந்த நிறுவனங்கள் மூலம் 22,585.83 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
மீட்பு எவ்வளவு?
மார்ச் 15, 2022 நிலவரப்படி, பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் (PMLA) 19,111.20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளில், 15,113.91 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை மீட்டு பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் 335.06 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இந்திய அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மொத்த இழப்பில் மீட்பு எவ்வளவு?
மார்ச் 15, 2022 நிலவரப்படி, இந்த வழக்குகள் மோசடி செய்யப்பட்ட மொத்த நிதியில் 84.61% பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பில் 66.91% ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இதில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தங்களுக்கு வழங்கிய சொத்துகளை விற்பனை செய்து அதன் மூலம் 7975,27 கோடி ரூபாயினை மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தப்பியோடிய குற்றவாளிகள்
இந்த பொருளாதார குற்றவாளிகளில் கிங்பிஷர் நிறுவனத்தின் விஜய் மல்லையா இங்கிலாந்திலும், அதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நிரவ் மோடி லண்டனிலும், இதே வழக்கில் சம்பந்தப்பட்ட மொகுல் சோக்சி கடந்த ஆண்டு கரிப்பியன் தீவான ஆண்டிகுவாவில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rs.19000 crore worth assets recovered from vijay mallaya, nirav modi, mehul choksi
Rs.19000 crore worth assets recovered from vijay mallaya, nirav modi, mehul choksi/ஊழல் புகழ் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மொகுல் சோக்சியின் ரூ.19000 கோடி சொத்துகள் பறிமுதல்..!