என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது! இராஜினாமா கடிதத்தில் கோட்டாபயவுக்கு அறிவித்த அமைச்சர்



புதிய இணைப்பு

நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இந்த தருணத்தில், வெறுமனே என்னால் வேடிக்கை பார்க்க முடியாது என   நிமல் லான்சா ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சிறப்புரிமை மற்றும் அதிகாரம் ஆகியவற்றை கடந்து தான் எப்போதும் மனசாட்சிக்கு கட்டுப்படுவதாகவும் அவர் தனது இராஜினாமா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், பொதுமக்களுக்கு உயரிய சேவைகளை வழங்கவும் தனக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியை வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்   தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

முதலாம் இணைப்பு

அரசாங்கத்திற்குள் இருந்து மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவே தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அண்மையில்  முன்னாள் இராஜாங்க அமைச்சரான ஜயந்த சமரவீர தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.