நியூயார்க் : ஐ.நா.,வின் உயர்மட்ட ஆலோசனை குழுவில் இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார வல்லுனர் ஜெயதி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச பிரச்னைகளில், குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், வரும் தலைமுறையினரின் நலன் சார்ந்து எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து ‘பொது செயல் திட்டம்’ என்ற அறிக்கையை ஐ.நா., உயர்மட்டக் குழு உருவாக்கியுள்ளது.
இதன் அடிப்படையிலான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த, சுவீடன் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் லோப்வன் உள்ளிட்டோர் தலைமையில், 12 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவை ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் அமைத்துள்ளார். இக்குழுவில் இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார வல்லுனர் ஜெயதி கோஷ் நியமிக்கப்பட்டுஉள்ளார். இவர், ஜவஹர்லால் நேரு பல்கலை.,யில் பொருளா தார கல்வி மற்றும் திட்டப் பிரிவின் தலைவராக பணியாற்றியவர். தற்போது மாசாசூசெட்ஸ் அம்ஹெர்ஸ் பல்கலை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
நியூயார்க் : ஐ.நா.,வின் உயர்மட்ட ஆலோசனை குழுவில் இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார வல்லுனர் ஜெயதி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச பிரச்னைகளில், குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், வரும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.