ஒரே நாளில் 3 படம் பாக்குற அளவுக்கு எங்க குடும்பம் ஒரு சினிமா பைத்தியம்…!

ஆர் ஜே பாலாஜி
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி இப்போது ஹீரோவாகவும் இயக்குனராகவும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டுள்ளார். நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் நடித்த
மூக்குத்தி அம்மன்
மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இப்போது வீட்ல விசேஷங்க என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார்.காமெடி, நடிப்பு, இயக்கம் என அனைத்திலும் கலக்கிக் கொண்டிருக்கும் ஆர்ஜே பாலாஜி, நாங்க ஒரு சினிமா பைத்திய குடும்பம், எங்க குடும்பமே அப்படித்தான் என செம ஜாலியாக பேசி உள்ளார்.

ரேடியோவில் தனது கலகலப்பான பேச்சின் மூலமும் மற்றவர்களை நக்கலடிக்கும் நையாண்டி மூலமும் ரசிகர்களை கவர்ந்ததைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானார். தீயா
வேலை செய்யணும் குமாரு
என்ற படத்தில் காமெடியனாக நடித்து அறிமுகமான ஆர் ஜே பாலாஜி அதைத் தொடர்ந்து இது என்ன மாயம், வடகறி, யச்சன்,
நானும் ரவுடிதான்
, தானா சேர்ந்த கூட்டம்,
பூமராங்
உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

காமெடியனாக நல்ல வரவேற்பு பெற்றதால் ஹீரோவாக நடிக்க நினைத்த ஆர் ஜே பாலாஜி
எல்கேஜி
என்ற படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானார். அரசியலை காமெடியான கதை களத்தில் கூறிய எல்கேஜி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது. முதல் முறையாக ஹீரோவாக நடித்த எல்கேஜி படம் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து இப்பொழுது கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார்.

எல்கேஜி ,மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களை தொடர்ந்து பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்ஜே பாலாஜி தற்போது நடித்துவருகிறார். இப்படத்திற்கு தமிழில் வீட்ல விசேஷங்க என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நேர் கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார். காமெடி பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில்
சத்யராஜ்
,
ஊர்வசி
ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

வீட்ல விசேஷங்க ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஆர் ஜே பாலாஜி தான் ஒரு சினிமா பைத்திய குடும்பம் என பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய ஆர் ஜே பாலாஜி நாங்க சினிமா பைத்தியம்.. எங்க குடும்பம் ஒரு நாளைக்கு 3 படம் பாப்போம்.. எங்க அம்மா தான் எங்களை கூட்டிட்டு போவாங்க..

பொதுவாக தீபாவளின்னா அம்மா குளிக்க வைப்பாங்க, புது டிரஸ் போடுவாங்க, பலகாரம் சுடுவார்கள், ஆனா எங்கம்மா உதயம் தியேட்டர் கூட்டிட்டு போனாங்க. பத்தரை மணிக்கு தளபதி படத்திற்கு டிக்கெட் கிடைக்கலை எனவே குணா படத்திற்கு போனோம்.. ரெண்ற மணிக்கு அடிச்சு புடிச்சு தளபதி டிக்கெட் வாங்கி பார்த்தோம்.. ஆறு மணிக்கு சின்ன கவுண்டர் பார்த்தோம். இப்படி ஒரே நாளில் 3 படம் பாக்குற அளவுக்கு எங்க குடும்பம் ஒரு சினிமா பைத்தியம் குடும்பம் என ஆர் ஜே பாலாஜி கலகலப்பாக அந்த நேர்காணலில் பேசியுள்ளார்.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.