உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கடந்த ஜனவரி மாதம் பரவ தொடங்கியதை அடுத்து அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்தது. அப்போது அங்கு ஒமைக்ரானின் துணை வகைகளான பிஏ 1, பிஏ.2 உருமாறிய வைரஸ்கள் பரவின.
இந்த நிலையில், ஒமைக்ரான் வகை கொரோனா வைரசின் உருமாறிய வகையான பிஏ2 வைரசால் பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
‘ஒமைக்ரான் வைரசின் உருமாறிய வகையான பிஏ.2 வைரசால் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும் எனவும், இது ஒமைக்ரானைவிட 60 சதவீதம் அதிக வேகமாக பரவும் தன்மை கொண்டது. என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி ஆகியவையே இந்த புதிய வகை தொற்று பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள சிறந்த வழியாகும்.
‘மூன்றாம் உலகப் போர் உருவாகும்!’ – உக்ரைன் அதிபர் எச்சரிக்கை!
அமெரிக்காவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும், இது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. அதே சமயம் ஒமைக்ரானைவிட அதன் பிஏ.2 மாறுபாடு கடுமையான பாதிப்பை ஏற்படுத்த கூடியதாக இல்லை’ என்று அமெரிக்க அரசின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி பாசி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை ஏற்பட்டுள்ள அனைத்துவகை கொரோனா பாதிப்புகளில் 50 முதல் 70 சதவீதம் வரையிலான பாதிப்பு பிஏ2 வகை வைரசால் ஏற்பட்டது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது குறி்ப்பிடத்தக்கது.