வாஷிங்டன் : அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக கேடன்ஜி பிரவுன் ஜாக்ஸனை நியமிப்பதற்கான ஓட்டெடுப்பு துவங்கியது.
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக கேடன்ஜி பிரவுன் ஜாக்ஸன், 51, என்ற கறுப்பினத்தை சேர்ந்த பெண்ணை நியமிக்க, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அமெரிக்க பார்லி.,யில் செனட் உறுப்பினர்களிடையே இதற்கான வாக்கெடுப்பு நேற்று துவங்கியது. அதிபர் பைடனின் இந்த முடிவை, ஜனநாயக கட்சி ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறது.
நாட்டில் 94 சதவீத வெள்ளை அமெரிக்கர்கள் வசிக்கும் போது வெறும் 6 சதவீதம் மட்டுமே இருக்கும் கறுப்பினத்தவரை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என ஜனநாயக கட்சி வலியுறுத்தியது. இதனால், குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரின் ஓட்டுகள் தவறாமல் கிடைக்கும் பட்சத்தில் கேடன்ஜி நீதிபதியாக செனட் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்.
அவ்வாறு தேர்வு பெற்றால், நீதிபதி ஸ்டீபன் பிரேயர், 83, என்பவர் ஓய்வு பெற்றவுடன் கேடன்ஜி, பொறுப்பேற்றுக் கொள்வார்.அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் கறுப்பினத்தை சேர்ந்த ஆண் நீதிபதிகள் ஏற்கனவே பணியாற்றிஉள்ளனர். கேடன்ஜி முதல் கறுப்பின பெண் நீதிபதி என்ற பெருமையை அடைவார்.
Advertisement