கூகுள் நிறுவனத்திற்கு எதிராக இனப்பாகுபாடு வழக்கு| Dinamalar

சிலிக்கான் வேலி கூகுள் நிறுவனம் அமெரிக்க – ஆப்ரிக்கர்கள் மற்றும் கருப்பின ஊழியர்களை பாரபட்சத்துடன் நடத்துவதாகக் கூறி அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த தேடுபொறி நிறுவனமான கூகுள் ஏப்ரில் கர்லி என்பவரை 2014ல் கருப்பின ஊழியர்களை நியமிக்கும் பணிக்கு அமர்த்தியது. பின் ஏப்ரில் கர்லியை 2020ல் கூகுள் பணி நீக்கம் செய்தது. இதையடுத்து கூகுள் நிறுவனத்தின் மீது ஏப்ரில் கர்லி கலிபோர்னியா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கூகுள் நிறுவன தலைமை அமெரிக்க – ஆப்ரிக்கர்கள் மற்றும் கருப்பினத்தவர்களை பாரபட்சத்துடன் நடத்துகிறது. நேர்காணல் முதல் பணிச் சூழல் வரை இனப்பாகுபாடு காட்டப்படுகிறது.

கருப்பினத்தவர்களுக்கு திறனற்ற வேலை குறைந்த ஊதியம் பதவி உயர்வு இல்லாத பணி போன்றவை ஒதுக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் பாதியிலேயே பணியிலிருந்து விலகி விடுகின்றனர். இந்த இனப் பாகுபாட்டை சரி செய்ய வேண்டும் என நான் வலியுறுத்தியதால் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன். எனவே கூகுளின் இனப் பாகுபாட்டில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கூகுள் நிறுவனம் பதில் அளிக்கவில்லை.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.