கேரளாவில் ஆட்டோ, டாக்சி வாடகை உயர்கிறது

திருவனந்தபுரம்: கேரளாவில் பெட்ரோல்,  டீசல் விலை உயர்வை தொடர்ந்து ஆட்டோ, டாக்சிகளுக்கான வாடகை கட்டண உயர்வு குறித்து பரிசீலித்து  அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற  நீதிபதி ராமச்சந்திரன் தலைமையில் ஒரு  கமிட்டி நியமிக்கப்பட்டது.இந்த கமிட்டி கேரள  அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. அதில் ஆட்டோகளுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ₹ 25ல் இருந்து ₹ 30ஆக  உயர்த்தலாம் என்றும், டாக்சிகளுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ₹ 175ல்  இருந்து ₹ 210 ஆக உயர்த்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதையடுத்து  கட்டண உயர்வு குறித்து ஆலோசனை செய்த பிறகு விரைவில்  முடிவெடுக்கப்படும் என்று  அமைச்சர் ஆன்டனி ராஜு  தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.