சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா நோய் வெகுவாக கட்டுக்குள் உள்ள நிலையில், கொரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சீனா உள்பட சில ஐரோப்பிய நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. சில நாடுகளில் தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் மக்கள் இன்னும் சில மாதங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், கோரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்போது கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் கூடுதல் தளர்வுகள் அளிப்பதா? அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பதா என்பது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் விவாதித்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா பொதுமுடக்கம் தளர்வு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.