கொரோனா தொற்று வேகமாகப் பரவத் துவங்கிய காலத்தில் உணவுப் பொருட்களுக்கு இணையாக மக்கள் அதிகம் தேடி அழைந்த ஒன்று சானிடைசர்.
கொரோனாவுக்கு முன்பு யாரும் பெரிய அளவில் பயன்படுத்தாத ஒன்று சானிடைசர், ஆனால் திடீரென உருவான டிமாண்ட காரணமாக 200 மில்லி பாட்டில் சானிடைசர் 150 ரூபாய்க்கு வாங்க வேண்டிய இக்காட்டான சூழ்நிலையில் உருவானது.
ஆனால் இன்று நிலைமை மொத்தமாக மாறியது மட்டும் அல்லாமல் சானிடைசர் தயாரிப்பில் இருக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
கொரோனா அச்சம்.. டெஸ்லா தொழிற்சாலை மூடல்.. எலான் மஸ்க் கவலை..!
சானிடைசர்
கொரோனா தொற்று இந்தியாவில் உருவான நாளில் இருந்து சானிடைசருக்கான டிமாண்ட் அதிகரிக்கத் துவங்கியது. இதன் விலையும் அதிகரிக்கத் துவங்கியது. ஆனால் சில வாரத்திலேயே சானிடைசர் விலை பெரிய அளவில் குறைந்தது, இதற்கு முக்கியக் காரணம் சிறிதும் பெரிதுமாகப் பல சானிடைசர் தயாரிக்கும் நிறுவனங்கள் உருவானது தான்.
கொரோனா தொற்று
தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாலும், மக்கள் அதனுடன் வாழப் பழக்கிக்கொள்ளும் நிலை உருவான காரணத்தால் சானிடைசர்-க்கான டிமாண்ட் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் சானிடைசர் விற்பனை சந்தையில் பெரிய அளவில் குறைந்துள்ளது.
பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள்
இதன் மூலம் கொரோனா தொற்றுக்குப் பின்பு சானிடைசர் உற்பத்தியைத் துவங்கிய பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் அனைத்தும் தற்போது வர்த்தகம் இல்லாமல் தவித்து வருவது மட்டும் அல்லாமல், சானிடைசர் விலையைப் பெரிய அளவில் குறைத்தும் உள்ளது.
உற்பத்தி குறைப்பு
ஆனாலும் சந்தையில் போதுமான வர்த்தகத்தைப் பெற முடியவில்லை, இதனால் ராடிகோ கைதான் நிறுவனம் சானிடைசர் உற்பத்தியைப் பெரிய அளவில் குறைத்துள்ளது. மேலும் டாபர் நிறுவனம் சானிடைசர் உற்பத்தி தளத்தை மூடிவிட்டு மொத்தமாக வெளியேறியுள்ளது.
தொழிற்சாலை மூடல்
பெரிய நிறுவனங்களுக்கே இந்த நிலை என்றால் சிறிய நிறுவனங்கள் பலவற்றும் தற்போது மூடப்பட்டு உள்ளது. பெரிய நிறுவனங்களால் பிராண்ட் வேல்யூ கொண்டும் வர்த்தகத்தை நகர்த்த முடியாத நிலையில் சிறிய நிறுவனங்களுக்கு வேறு வழி இல்லாமல் நிறுவனத்தை மூடியுள்ளனர்.
sanitiser demand falls drastically big players cut production, small companies shutdowns
sanitiser demand falls drastically big players cut production, small companies shutdowns கொரோனா பயம் குறைந்தது.. சானிடைசர் டிமாண்ட் மறைந்தது.. தொழிற்சாலைகள் மூடல்..!