லீவ் : உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘மரியுபோல் நகரில் உள்ள மக்கள் வெளியேற வாய்ப்பளிக்கும் வகையில், உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும்’ என, ரஷ்யா கூறியுள்ளது.
ஆனால், இதற்கு உக்ரைன் மறுத்துள்ளது.ஏவுகணை தாக்குதல்கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் உடனான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து, அதன் மீது ரஷ்யா போர் தொடுத்துஉள்ளது. மூன்று வாரங்களைக் கடந்த பிறகும், உக்ரைனின் பல நகரங்களில் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது.தலைநகர் கீவ் நகருக்கு அருகில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒரு அடுக்குமாடி கட்டடம் கடுமையாக சேதமடைந்தது. இதில், எட்டு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே உக்ரைனின் வடமேற்கே உள்ள ஒரு ரசாயன ஆலை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் கூறிஉள்ளது.
அந்த ஆலையில் இருந்து நச்சு வாயு வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான மரியுபோலைக் கைப்பற்ற ரஷ்ய ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது. வெள்ளைக் கொடிஇந்நிலையில், இந்நகரில் இருந்து மக்கள் வெளியேற வாய்ப்பு அளிப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. இதற்கு, ‘உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கைவிட்டு, சரணடைந்து, வெள்ளைக் கொடியை ஏந்த வேண்டும்’ என ரஷ்யா கூறியுள்ளது…
ஆனால், இதை ஏற்க உக்ரைன் அரசு மறுத்துஉள்ளது. ரஷ்யாவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என உக்ரைன் கூறிஉள்ளது.போலந்து செல்கிறார் பைடன்உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் மற்றும், ‘நேட்டோ’ எனப்படும் வடஅமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்களை சந்திக்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுஉள்ளார்.
இதற்காக இந்த வாரத்தில் சில ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதில், உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கும் அவர் செல்ல திட்டமிட்டுள்ளார்.
Advertisement