சிக்கலில் 'யா' போன் – மலிவான UniSoc சிப்செட்டில் மறைந்திருக்கும் ஆபத்து!

அனைவராலும் விலையுயர்ந்த மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாது என்பதால், இன்று பல ஸ்மார்ட்போன் பயனர்கள் மலிவான போன்களை வாங்க விரும்புகிறார்கள். விலை குறைவாக இருந்தாலும், இந்த போன்களில் தேவையான அனைத்து லேட்டஸ்ட் அம்சங்களையும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்குகின்றன.

இதனால், குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை மக்கள் பெரிதும் விரும்பி வாங்குகின்றனர். ஆனால் மலிவு விலை ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பெரிய ஆபத்து உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோவயர் அறிக்கை

மலிவு மற்றும் பட்ஜெட் பிரிவுகளில் வரும் இந்த ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் சிப்செட்டுகளில் இருக்கும் தீங்கிழைக்கும் பிழைகள், பயனர்களின் தனியுரிமை தகவல் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கிரிப்டோவயர் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Cryptowire அறிக்கையில், பல நிறுவனங்களின் பிரபலமான ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டுள்ள
UNISOC SC9863A
புராசஸரில் பெரிய குறைபாடு உள்ளது. இது பயனர்களை பெரும் சிக்கலில் சிக்க வைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்ன இந்த புராசஸரில் உள்ளது என அறிந்து கொள்ளுங்கள்.

அவ்ளோ அழகுங்க இந்த SAMSUNG 5G போன் – ஸ்பெக்கும் டாப் டக்கர்!

மலிவு விலை ஸ்மார்ட்போனில் இருக்கும் ஆபத்து

கிரிப்டோவைர் தனது அறிக்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மொபைல் புராசஸர் தான் காரணம் என்று தெரிவித்துள்ளது. இது
UNISOC
SC9863A சிப்செட்டில் தான் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. இந்த சிப்செட் பயன்படுத்தும் பயனர்களின் ஸ்மார்ட்போன்களை ஹேக்கர்கள் முழுவதுமாக அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பயனரின் தனியுரிமை தகவல்களை எளிதாக திருடவோ, நீக்கவோ முடியும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புராசஸரில் காணப்படும் இந்த தீங்கிழைக்கும் பிழைகளைக் கொண்டு, ஹேக்கர்கள் போனின் முன்பக்க கேமரா மற்றும் மைக்கை எளிதாக அணுக முடியும் என அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.

புராசஸரில் உள்ள குறைபாடுகள் உதவியுடன், சைபர் கிரிமினல்கள் தொலைபேசி அழைப்பு பதிவுகள், குறுஞ்செய்திகள், தொடர்புகள் என பயனர்களின் அனைத்து தனியுரிமை தகவல்களையும் அணுக வாய்ப்பு அதிகமாக இருப்பதாக Cryptowire தெரிவித்துள்ளது.

Nokia எடுத்த திடீர் முடிவு – இனி இந்த போன்கள் வெளிவராது!

UNISOC SC9863A சிப்செட் பல மலிவான ஸ்மார்ட்போன்களில் வருகிறது. இதில்

Realme C11Samsung Galaxy A03 CoreNokia C01 PlusNokia C20 PlusNokia C30Gionee MaxGionee Max Proitel A49Lava Be UTecno Pop 5 LTE
போன்ற பிரபலமான ஸ்மார்ட்போன்கள் அடங்கும். Nokia தனது ஸ்மார்ட்போன்களில் உள்ள குறைகளை சரிசெய்து விட்டதாக அறிவித்துள்ளது பயனர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. விரைவில் பட்டியலில் உள்ள பிற நிறுவனங்களும் இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more:
இத மட்டும் செய்யாதீங்க – முடக்கப்படும் Whatsapp கணக்குகள்!பாதுகாப்பாக இணையத்தில் உலாவ சிறந்த VPN-கள்?Cert-in Alert: நீங்கள் Google குரோம் பயனர்களா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.