சீருடைகளில் ஏற்றத்தாழ்வு ஏன்?எல்லா பள்ளிகளிலும் பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருக்கும் போது, பள்ளி சீருடைகளில் மட்டும் மாறுபட்ட வண்ணங்களில் சீருடை இருக்கலாமா; ஏற்ற தாழ்வின்றி சமத்துவத்தை காட்டுகிற சீருடையில் வித்தியாசம் இருக்கலாமா?இப்புடி யூனிபார்ம் விஷயத்தில் சிலரு பிரச்னை எழுப்பி இருக்காங்க. அரசு எந்த மாதிரியான வண்ண சீருடை அணிய வழங்குகின்றனரோ, அதனையே தனியார் பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டும். சில பள்ளிகள் ‘கோட்டு சூட்டு’ போடச் சொல்றாங்களே, அவங்க என்ன அப்புடி ஒசத்தியா பாடம் படிக்கிறாங்க. ஒரே கல்வி கொள்கையை விரும்பும் நாட்டில் உடைகளில் பணக்கார பந்தா எதுக்கு. கோல்டு சிட்டியிலும் பணம் பறிக்க ‘குவாலிட்டி’ கல்வி தராங்களாம். இதற்கு கடிவாளம் போட வட்டார கல்வி ஆபிசர் கவனிக்க வேணும்னு பெற்றோர் விரும்புறாங்க!அபிவிருத்தி பணிகள் நடக்கல!அனைத்து அபிவிருத்தி பணிகளிலும் அரசு தவறி விட்டதுன்னு ‘மாஜி’ எம்.பி., கூறினார்.அது கிடக்கட்டும்; இவரோட மகள் தொகுதியில் அபிவிருத்தி பணிகள் எதுவுமே நடக்கலன்னு இவரே சொல்றாரா. இந்த சந்தேகம், அப்பாவுக்கே வரலாமா. பொது ஜனம் தான் குறையா சொல்றாங்கன்னு பார்த்தால், இவரே எந்த அபிவிருத்தி பணியும் நடக்கலேன்னு சொல்றாரேன்னு பலரையும் யோசிக்க வைத்திருக்கு.தாலுகா ஏற்படுத்தி தொகுதியில் இன்னும் கூட சப் – ரிஜிஸடிரார் அலுவலகமே ஏற்படலையே. இப்பவும் ப.பேட்டைக்கு தான் ஓடிக் கொண்டிருக்காங்களே. எங்கே அபிவிருத்தி பணிகள் முளைத்திருக்கு. அசம்பிளி மேடத்தின் ‘டாடி’, தெரியாமல் உரிகம் அம்பேத்கர் சாலையில் வந்திருப்பாரோ. அதன் நிலைமையை பார்த்து தான் அபிவிருத்தி பணிகள் நடக்கலன்னு சொன்னாரோ?துாங்கும் சுத்திகரிப்பு திட்டம்?கோல்டு சிட்டியில் கழிவு நீரை சுத்திகரிக்கும் ‘அம்ருத் சிட்டி திட்டம்’ சொர்ணகுப்பம் பகுதியில் 2019 செப்டம்பரில் ஆரம்பிச்சாங்க. 2020 ஆகஸ்ட்டில் முடிக்க வேணும்ன்னு ஒப்பந்தம் செஞ்சாங்க. இதற்கான தொகை 6.44 கோடி ரூபாய். ஒப்பந்தக்காலம் முடிந்து 2 ஆண்டு ஆகிறது. இன்னும் அதன் பணி 50 சதவீதமும் முடியல. இதற்காக அரசு வழங்கினபணம் என்னானது. அந்த ஒப்பந்தக்காரரிடம் வேலையை ஏன் முடிக்கலன்னு யாரும் ஏன் விசாரிக்கல. இதன் மர்மம் என்னன்னு பேச துவங்கி இருக்காங்க.அசம்பிளிக்கான பொதுத்தேர்தல் இப்பவே பிரச்சாரம் ஸ்டார்ட் ஆகியுள்ளதால், ஊழல், கமிஷன் கொள்ளை பற்றி அரசியல் கட்சியினர் பட்டியல் சேகரிச்சு வர்ராங்க!
Advertisement