சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280ரூபாய் உயர்ந்து, 38ஆயிரத்து 500ஐக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து அதன் விலை உயர்ந்து வரும் நிலையில், அவ்வப்போது மட்டும் சிறிதளவு குறைந்து, ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி, கிராமுக்கு 35ரூபாய் உயர்ந்து, 4ஆயிரத்து828ரூபாய்க்கும், சவரனுக்கு 280 உயர்ந்து, 38ஆயிரத்து 624 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு 800ரூபாய் அதிகரித்து 73,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.