சென்னை:
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் 2-வது நாளாக இன்று ஆஜரானார். விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்தியது. அப்போது ஓ. பன்னீர்செல்வம் அளித்த பதிலில் கூறியதாவது:
ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை.
ஜெயலலிதா குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு கூறியபோது, என்னை அழைத்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்ட சொன்னார் ஜெயலலிதா.
பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் நத்தம் விஸ்வநாதனை அழைத்து, ஓ.பன்னீர்செல்வம் தான் முதல்வர் என ஜெயலலிதா கூறினார்.
மிகுந்த துயரத்துடன் அழுது கொண்டிருந்தபோது, என்னிடம் அழாதே பன்னீர், இந்த நேரத்தில் நீ தைரியமாக இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் சபாநாயகர் தனபால் பாராட்டு