“டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறப்பதற்கு முன் நேரில் பார்த்தோம்!” – ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அது குறித்து விசாரிக்கக் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார். அப்போது ஒ.பன்னீர் செல்வம், “அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த போது ஒரு சில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம்

இதனை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்துள்ளேன், பொதுவெளியில் எங்கும் நான் பேசவில்லை. அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்தவித தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது.” என்றார்.

தொடர்ந்து, “திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அறவக்குறிச்சி ஆகிய மூன்று இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரைத் தேர்வு செய்தது ஜெயலலிதா தான். மேலும், இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்குத் தெரியும்” எனவும் தெரிவித்திருக்கிறார்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தீவிரம்

இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு இதயத்தில் இருந்த பிரச்னை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆணையம் கேள்வி எழுப்ப முயன்ற போது அப்போலோ தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். “சிகிச்சை தொடர்பாக எதுவும் தனக்குத் தெரியாது என ஓ.பன்னீர் செல்வம் நேற்றே வாக்குமூலம் அளித்த நிலையில் இன்று அது தொடர்பான கேள்விகளை எழுப்பக் கூடாது” என வாதிட்டார்.

அதற்கு ஆணைய வழக்கறிஞர், “ஜெயலலிதாவுக்கு இருந்த வியாதி தொடர்பாகவோ, அதற்கு அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்துத் தான் கேள்வி எழுப்பக் கூடாது. வியாதி இருந்தது உங்களுக்குத் தெரியுமா எனக் கேள்வி எழுப்பலாம்” எனப் பதிலளித்தார்.

ஓபிஎஸ்

இதைத் தொடர்ந்து, “மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்கும் போது முந்தைய சாட்சிகள் கூறிய கருத்துக்களை முன்கூட்டியே வழங்க வேண்டும், மேலும் மருத்துவர்களை உடன் வைத்திருக்க வேண்டும்” என அப்போலோ வழக்கறிஞர் தெரிவித்தற்கு “உங்களின் குறுக்கீடு பதிவு செய்யப்பட்டது” என ஆறுமுகசாமி ஆணையம் பதிலளித்துள்ளது.

தொடர்ந்து விசாரணையில், ஜெயலலிதா இறப்பதற்கு முன் மூன்று அமைச்சர்கள் சென்று அவரை நேரில் பார்த்ததாக விசாரணை ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார்,

“டிசம்பர் 4 தேதி அப்போதைய ஆளுநர் அப்போலோ மருத்துவமனை வந்திருந்தும், ஜெயலலிதாவை சந்திக்காமல் அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டியை மட்டும் சந்தித்தது குறித்து தனக்கு நினைவில்லை” என விளக்கம் அளித்தார்.

பன்னீர்செல்வம்

“டிசம்பர் மாதம் 4 -ம் தேதி ஜெயலலிதாவுக்கு இதயம் செயல் இழந்த பின்பாக மீண்டும் இதய துடிப்பை தூண்டும் CPR சிகிச்சை செய்தது தனக்கு தெரியாது. ஆனால் மாலை 05.30 மணிக்கு எக்மோ பொருத்தப்பட்டது தொடர்பாக அப்போதைய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். டிசம்பர் 5 ம் தேதி ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு நான் உடப்பட மூன்று அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்தோம்.” எனவும் தெரிவித்தார்,

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.