தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான
தனுஷ்
,
ஐஸ்வர்யா
ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திடீரென கடந்த ஜனவரி மாதம் பிரிய போவதாக அறிவித்தனர்.
தனுஷ், ஐஸ்வர்யாவின் இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. இவர்கள் இருவரும் பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். மேலும் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க இரண்டு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.
விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னரும் சோஷியல் மீடியா பக்கங்களில் தனுஷ் பெயரை நீக்காமல் வைத்திருந்தார் ஐஸ்வர்யா. இதனால் இருவரும் மீண்டும் சேருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் திடீரென நேற்று முன்தினம் ட்விட்டரில் தனக்கு பின்னாடி இருந்த தனுஷ் பெயரை நீக்கி, தனது தந்தை ரஜினிகாந்த் பெயரை இணைத்துள்ளார் ஐஸ்வர்யா.
‘மன்மத லீலை’ படத்துல கில்மா இருக்கா..?: உண்மையை போட்டுடைத்த வெங்கட் பிரபு..!
அவரின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவாகரத்து அறிவிப்பிற்கு பின் இவ்வளவு நாள் தனுஷ் பெயரை தனக்கு பின்னாடி வைத்திருந்த ஐஸ்வர்யா, திடீரென அவரது பெயரை நீக்கியது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதாவது திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போன்ற முக்கியமான பிரபலங்களுக்கு சமூக வலைத்தள பக்கங்களில் ப்ளு டிக் வழங்கப்படும்.
பிரபலங்களின் உறுதி செய்யப்பட்ட கணக்கு என்பதற்கு ஆதாரம் தான் இந்த ப்ளு டிக். இந்த கணக்கை வைத்திருப்பவர்கள் தங்களின் பெயரை மாற்றினால் ப்ளு டிக் நீக்கப்படுமாம். இதனால்தான் ஐஸ்வர்யா இவ்வளவு நாளாக தனது பெயரை மாற்றாமல் இருந்துள்ளராம். தற்போது ட்விட்டரின் விதிகளுக்குட்பட்டு தனது பெயரை மாற்றியுள்ளாராம். இதே போல் இன்ஸ்டாகிராமில் விரைவில் தனது பெயரை ஐஸ்வர்யா மாற்றுவார் என கூறப்படுகிறது.
மீண்டும் ஃபார்முக்கு வந்த விஜயகாந்த்; போட்டோ பார்த்து குஷியான ரசிகர்கள்!