சென்னை: தமிழகத்தில் 13 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தி.நகர் துணை ஆணையராக இருந்த ஹரி கிரண் பிரசாத் குமரி எஸ்.பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி சுகுனா சிங் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி ஆக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸ் பயிற்சி அகாடமி துணை இயக்குனர் ஜெயலட்சுமி நவீன கட்டுப்பாட்டு அறை எஸ்.பி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
