வட மாகாண மக்களின் சட்ட ரீதியான சிக்கல்களை தீர்ப்பது தொடர்பாக இடம்பெற்ற ‘நீதிக்கான அணுகல்’ நடமாடும் சேவையின் மீளாய்வு விசேட உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று (21) வெளியுறவுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸின் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ‘நீதிக்கான அணுகல்’ நடமாடும் சேவையில் கிடைக்கப்பெற்ற வடக்கு மாகாண மக்களின் காணி, வனவள, வனஜீவராசிகள், கடற்றொழில், கரையோர பாதுகாப்பு, கடல் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை மக்களுக்கு உடனடியாக பெற்றுக்கொடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இவ் உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன், நீதி அமைச்சு, வெளியுறவுத்துறை அமைச்சு, காணி அமைச்சு, வனஜீவராசிகள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, கடற்றொழில் அமைச்சு, உள்ளிட்ட பல அமைச்சுக்களின் செயலாளர்களும், திணைக்கள தலைவர்களும் இவ் உயர்மட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Logini Sakayaraja