பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் மேலதிக 51 வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் செலுத்தப்பட்டிருந்தன. குழு நிலை விவாதத்தின் போது பல்வேறு திருத்தங்களுடனும் இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. 3வது வாசிப்பின் போது வாக்கெடுப்பின்றி இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை முக்கிய அம்சமாகும்.
பயங்கராதத்தைக் கட்டுப்படுத்த இவ்வாறான சட்டங்கள் அவசியம் என்று விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இணையவழி தாக்குதல்கள், புனர்வாழ்வு என்பன பற்றியும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன
இந்தச் சட்டமூலம் மனித குலத்திற்கு எதிரானது இதனை நான் எதிர்க்கின்றேன்.
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க
பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை பற்றி மாத்திரமின்றி நாட்டின் பொருளாதார மூலோபாயங்கள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும்.