பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாலிவுட் படத்தில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர், தனது கணவர் தனுஷ் மற்றும் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனை வைத்து ‘3’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து, நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா ஆனந்தை வைத்து, ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

பின்னர், நீண்ட காலமாக படங்கள் ஏதும் இயக்காதநிலையில், அண்மையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் மியூசிக் ஆல்பம் ஒன்றை இயக்கியிருந்தார். இந்த ஆல்பம் கடந்த கடந்த 17-ம் தேதி வெளியானது. இதன்பிறகு, சிம்பு, லாரன்ஸ் ஆகிய இருவரில் ஒருவரை வைத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படம் ஒன்றை இயக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது இந்தி திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

image

அதன்படி, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ‘இந்த வாரம் இதைவிட சிறப்பான நாளாக துவங்காது. இந்தியில் நான் இயக்குநராக அறிமுகமாகும் ‘ஓ சாதி சல்’ படத்தை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உண்மை காதல் கதையை கொண்டு உருவாகும் இந்தப் படத்திற்கான முதல் கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை மீனு அரோரா, கிளவுட் 9 பிக்சர்ஸ் தயாரிக்கிறது’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

My week couldn’t have started better..Happy n feeling blessed to announce my directorial debut in Hindi “Oh Saathi Chal”,an extraordinary true love story,produced by @MeenuAroraa @Cloud9Pictures1 @archsda #NeerajMaini need all your blessings n wishes pic.twitter.com/zqDH2BkQme
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) March 21, 2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.