பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தும் ரஷ்யா! சிக்கிய ஆதாரம்


 உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்ய படைகள் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக கீவ் நகரின் காவல்துறை துணைத்தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Donetsk-ன் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள Kramatorsk நகரில் ரஷ்யப் படைகள் வெள்ளைப் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியதாக கிவ்வின் துணைக் காவல்துறைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு பொருள் தரையில் எரிந்தபோது காற்றில் வெள்ளை புகையை வெளியாகும் வீடியோவை Oleksiy Biloshytskiy சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

உக்ரேனியர்களுக்காக வழங்கப்பட்ட நன்கொடையை திருடிச் சென்ற பிரித்தானியர்கள்! 

Kramatorsk-ல் ரஷ்ய படையினர் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்திகின்றனர் என்பதற்கான மற்றொரு ஆதாரம் இது என குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை பாஸ்பரஸ் ஒரு நச்சுப் பொருளாகும், இது ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொள்ளும்போது எரிந்து நச்சுப் புகையை வெளிப்படுத்தும்.

இது பாஸ்பேட் கொண்ட பாறைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் உரங்கள், உணவு சேர்க்கைகள் மற்றும் துப்புரவு கலவைகள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.