நாட்டில் தற்பொழுது பயன்படுத்தப்படும் கொவிட் வைரசு தொற்றை தடுப்பதற்காக. 3 ஆவது டோசுக்காக பயன்படுத்தப்படும் மருந்து கையிருப்பு முடிவடைந்தால் அதனை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு சில காலம் செல்லும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் இதுவரையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் முடிந்தவரை விரைவாக mjid பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் வரையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டோரின் மொத்த எண்ணிக்கை 76 இலட்சத்து 89 ஆயிரத்து 489 ஆகும் என்றும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.