கூடலூர்: முல்லைப்பெரியாறு அணை மராமத்து பணிக்கு தமிழக பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளருடன், பணியாளர்கள் நேற்று சென்றனர். அப்போது கேரள வனத்துறை சோதனைச்சாவடியில், ‘‘மராமத்து பணிக்கு ஆட்களை அழைத்துச் செல்வதாக இருந்தால், முன்னதாக கடிதம் தரவேண்டும். அந்த கடிதத்திற்கு கேரள நீர்வளத்துறை, கேரள போலீசார் அனுமதி அளித்த பின் அழைத்துச் செல்ல வேண்டும்’’ என்றனர். இதனால் அனைவரும் தமிழகத்துக்கு திரும்பி விட்டனர்.