தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது.
இந்த ஏற்றமானது மீண்டும் இப்படியே தொடருமா? அல்லது சரிவினைக் காணுமா? அடுத்து என்ன செய்யலாம். நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
தங்கத்தின் விலையினை தொடந்து அதிகரிக்கும் விதமாக சர்வதேச காரணிகள் பலவும் சாதகமாகவே உள்ளன. குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையானது இன்று வரையில் முடிந்தபாடாக இல்லை. தொடர்ந்து 27 நாளாக நீடித்து வரும் தாக்குலானது, நாளுக்கு நாள் உக்கிரமடைந்து கொண்டே தான் வருகின்றது. உக்ரைன் சரணடையும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தங்கம் விலையில் தொடரும் தள்ளுபடி.. ஏன்.. இது சரியான வாய்ப்பா?
மோசமான நிலை
உக்ரைனின் மரியுபோலில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்த நகரத்தில் உள்ல 80% கட்டிடங்கள் உருக்குலைந்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கு 3 லட்சம் பேர் மின்சாரம், உணவு, நீர் இன்றி தவிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ரஷ்யா மிகவும் சக்தி வாய்ந்த சூப்பர் சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், உக்ரைன் வீரர்களை சரணடைய கூறி வருவதாகவு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் உக்ரைனோ சரணடையும் பேச்சுக்கே இடமில்லை என தொடர்ந்து போராடி வருகின்றது.
தேவை அதிகரிப்பு
ரஷ்யா – உக்ரைன் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில், தங்கத்தின் தேவையானது முதலீட்டு ரீதியாக அதிகரித்து வருகின்றது. தொடர்ந்து இவ்விரு நாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடந்து வந்தாலும், அது இதுவரையில் கைகொடுத்ததாக தெரியவில்லை. இன்று வரையிலும் பிரச்சனையானது நீண்டு கொண்டே தான் உள்ளது. இதற்கிடையில் உக்ரைன் அதிபர் நேரடியாக பேச்சு வார்த்தை தயார் என்றும் கூறியுள்ளார். ஆக இனியேனும் பதற்றம் தணியுமா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ரூ.3600-க்கு மேல் சரிவு
இந்திய சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து 51,900 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. எனினும் 10 கிராமுக்கு முந்தைய வாரத்தில் அதிகபட்சமாக 55,558 ரூபாயாக உச்சம் தொட்டது. ஆக அதனுடன் ஒப்பிடும்போது 3600 ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டு காணப்படுகின்றது. இதே தங்கத்தின் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 4300 ரூபாயாக்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது. நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் விரைவில் வரலாற்று உச்சத்தினை உடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைக்கும் வர்த்தகர்களுக்கு இது சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
பணவீக்கம்
தொடர்ந்து சர்வதேச நாடுகளில் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில், பணவீக்கமானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சுமுக நிலை எட்டப்படுமா?
உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றமான நிலையானது விரைவில் சுமூக நிலை எட்டப்படலாம். இது ஒரு உடன்பாட்டை எட்டும் நிலையை அடைந்துள்ளது என துருக்கியின் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியிருந்தார். எனினும் ரிஸ்கான முதலீடுகள் முதலீடுகளுக்கான தேவையானது குறைந்தது. எண்ணெய் விலையானது மேலும் உச்சத்தினை எட்டி வருகின்றது. சுமூக விலை எட்டப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில் தான் கடந்த வார இறுதியில் தங்கம் விலை சரிவினைக் கண்டது.
3% சரிவு
சொல்லப்போனால் பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம், வட்டி விகித உயர்வு உள்ளிட்ட சில காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது 3% அதிகமாக சரிவினைக் கண்டது. மேலும் நடப்பு ஆண்டில் வட்டி விகிதத்தினை அமெரிக்காவின் மத்திய வங்கியானது 6 முறை அதிகரிக்கலாம் என்றும், அடுத்த ஆண்டில் 3 முறை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் மத்திய வங்கியின் கொள்கையானது இன்னும் கடுமையான இறுக்கத்தினை காணலாம்.
இப்படியும் இருக்கலாம்
வட்டி விகிதம் அதிகரித்தாலும், பணவீக்கம் என்பது தொடர்ந்து தற்போதைய நிலையில் பெரியளவில் குறையுமா? என்று எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதன் காரணமாக நடுத்தர காலத்தில் தங்கம் விலையானது நேர்மறையாகவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்னிக்கல் என்ன சொல்கிறது?
சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தினசரி கேண்டில், 5 மணி நேர கேண்டில், என அனைத்தும் தங்கம் விலை ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. நீண்டகால நோக்கிலும் வாங்கி வைக்க நல்ல இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் உக்ரைன் – ரஷ்யா இடையேயான போக்கு உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது. இதில் சுமூக நிலை ஏற்படும் பட்சத்தில் அது தங்கம் விலையில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
சர்வதேச சந்தையில் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று அதிகரித்து 1937 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் வெள்ளி
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் கிட்டதட்ட 1% ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 25.517 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 190 ரூபாய் அதிகரித்து, 51,845 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 602 ரூபாய் அதிகரித்து, 68,952 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்றே அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து, 4828 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 38,624 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 38 ரூபாய் அதிகரித்து, 5267 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து, 42,136 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,670 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 0.80 பைசா அதிகரித்து, 73.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 734 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 73400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், இன்று சற்று ஏற்றத்தினையே கண்டுள்ளது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. நீண்டகால நோக்கிலும் வாங்கி வைக்கலாம். இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.
gold price on march 22nd 2022: gold price rises amid Ukraine issue boost demand
gold price on march 22nd 2022: gold price rises amid Ukraine issue boost demand/பெரும் ஏமாற்றத்தை கொடுத்த தங்கம் விலை.. விலை குறைந்திருக்கா.. இனி குறையுமா?