போட்ட பணமாவது மிஞ்சுமா.. பேடிஎம் முதலீட்டாளர்களுக்கு பெருத்த அடி..!

பேடிஎம் பங்கு வெளியீட்டினை, பங்கு சந்தையினை பற்றி அறிந்தவர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பொதுப் பங்கு வெளியீட்டில் ஒரு பங்கினை வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கலாம் என்ற எண்ணத்தினை சுக்கு நூறாய் உடைத்தது பேடிஎம் ஐபிஓ தான்.

பேடிஎம் ஐபிஓ-விக்கு பிறகு முதலீட்டாளர்கள் வெளியீட்டில் ஒரு பங்கினை வாங்குகிறார்கள் எனில், அதனை பற்றிய முழுமையாக தெரிந்த கொண்ட பின்னரே முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.

அந்தளவுக்கு ஒரு நல்ல பாடத்தை புகட்டியுள்ளது பேடிஎம் ஐபிஓ. பங்கு பட்டியலில் ஆரம்பித்த சரிவானது இன்றைய நாள் வரையில் தொடர்ந்து கொண்டே உள்ளது.

13 மாடி கனவு வீட்டை கட்டும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா..!

போட்ட பணமாவது மிஞ்சுமா?

போட்ட பணமாவது மிஞ்சுமா?

இதில் போட்ட பணமாவது மிஞ்சுமா? என்று எதிர்பார்த்தவர்களுக்கு கூட, இருக்கும் பணமாவது மிஞ்சட்டுமே என்ற எண்ணத்தினை உருவாக்கியுள்ளது.

பேடிஎம் நிறுவனத்தின் பங்கு விலையானது அதன் ஆல் டைம் உச்சத்தில் இருந்து 72% சரிவினைக் கண்டுள்ளது. இதன் ஆல் டைம் உச்சம் 1961 ரூபாயாகும்.

இன்றைய பங்கு விலை நிலவரம்?

இன்றைய பங்கு விலை நிலவரம்?

பேடிஎம் நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில் தற்போது 3.78% வீழ்ச்சி கண்டு, 544.35 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 590.45 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 541.20 ரூபாயாகும்.

இதே (3.11 மணி நிலவரப்படி) பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலை 3.77% சரிந்து, 544.05 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 590.60 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 541.15 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 2150 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 541.15 ரூபாயாகும். சொல்லப்போனால் இன்று அதன் 52 வார குறைந்தபட்ச விலையில் வர்த்தகமாகியுள்ளது. இது தொடர்ந்து சரிவினையே கண்டு வருகின்றது.

வாங்கலாமா?
 

வாங்கலாமா?

இதற்கிடையில் பேடிஎம்மின் சந்தை மூலதனமானது 35,915.27 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இப்பங்கின் விலையானது அதல பாதாளத்தில் உள்ள நிலையில், தொடர்ந்து இன்னும் சரிவினையே கண்டு வருகின்றது. ஆக இந்த பங்கின் விலையானது இனியேனும் அதிகரிக்குமா? இல்லை இந்த சரிவு தொடருமா? ஏற்கனவே பெரும் சரிவினைக் கண்டுள்ளது. ஆக இதனை வாங்கலாமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இப்போதைக்கு வேண்டாம்?

இப்போதைக்கு வேண்டாம்?

இது குறித்து ஷேர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிபுணர், பேடிஎம் பங்கு விலையானது தொடர்ந்து சரிவினையே கண்டு வருகின்றது. இது இன்னும் சற்று சரியும் விதமாக காணப்படுகின்றது. இதன் விலையானது 500 – 450 ரூபாய் என்ற லெவலை தொடலாம். ஆக முதலீட்டாளர்கள் புதியதாக வாங்க நினைப்பவர்கள் தற்போதைக்கு தவிர்க்கலாம் என பிசினஸ் டுடேவுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுவும் சரிவுக்கு ஒரு காரணம்?

இதுவும் சரிவுக்கு ஒரு காரணம்?

சில தினங்களுக்கு முன்பு பேடிஎம் நிறுவனத்தின், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்கள் மற்றும் இதர தரவுகளைத் தனது சீன முதலீட்டு நிறுவனத்திற்குப் பகிர்ந்தது தொடர்பாக ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கையை எடுக்க முடிவு செய்தது. இதுவும் பேடிஎம்மில் தொடர் சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

paytm shares hit new all time low today: is it a right time to buy?

paytm shares hit new all time low today: is it a right time to buy?/போட்ட பணமாவது மிஞ்சுமா.. பேடிஎம் முதலீட்டாளர்களுக்கு பெருத்த அடி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.