பட்ஜெட் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முதல் அமர்வு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், 2-வது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இன்று 2-வது நாள் கூட்டம் தொடங்கியுள்ளது.
சுமார் ஐந்து மாதங்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை இன்று உயர்ந்துள்ளது. இதுகுறித்து பாராளுமன்றத்தில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. வருங்கால வைப்பு நிதியின் வட்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது.
எதிர்க்கட்சிகளக்கு எப்படி பதிலடி கொடுப்பது குறித்து பிரதமர் மோடி இன்று ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படியுங்கள்…. மற்ற திட்டங்களை விட வருங்கால வைப்புநிதிக்கு அதிக வட்டி: நிர்மலா சீதாராமன்