மீடியம் டெர்மில் நல்ல லாபம் கொடுக்க கூடிய 7 பங்குகள்.. நிபுணர்களின் சூப்பர் பரிந்துரை

பங்கு சந்தை முதலீடுகளை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் லாபகரமான முதலீட்டு திட்டங்களாக உள்ளன. எனினும் கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.

இப்படி இருக்கும்பட்சத்தில் இப்போது முதலீடு செய்தால் அது லாபகரமானதாக இருக்குமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

இந்த சரிவினையும் லாபகரமானதாக மாற்ற முடியும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

உலகிலேயே அதிக கடன் வாங்கிய எவர்கிராண்டே.. பங்கு சந்தையில் இடை நிறுத்தம்.. ஏன்!

ரேடிகோ கைத்தான்

ரேடிகோ கைத்தான்

சமீபத்திய சரிவுக்கு பிறகு பல பங்குகளும் சரிவில் இருந்து மீண்டு வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் ரேடிகோ கைத்தான் பங்கினை 955 – 950 ரூபாய் என்ற லெவலில் வாங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் இலக்கு இலை 1020 ரூபாயாகவும், இதன் ஸ்டாப் லாஸ் விலை 912 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த பங்கின் விலையானது 0.71% குறைந்து, 956.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

சதர்ன் பெட்ரோகெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ்

சதர்ன் பெட்ரோகெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ்

சதர்ன் பெட்ரோகெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இலக்கு விலை 70 ரூபாயாகும்.

தற்போது சந்தையில் தொடர்ந்து தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ளது. ஆக வாடிக்கையாளர்கள் 59 ரூபாயினை ஸ்டாப் லாஸ் ஆக வைத்து வாங்கலாம்.

ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப்
 

ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப்

ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் நிறுவனத்தின் இலக்கு விலையானது 560 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 724 ரூபாயினை தொட்ட நிலையில், அதன் பிறகு மார்ச் மாதத்தில் 430 ரூபாய் என்ற லெவலை தொட்டது. இதனை 491 – 495 ரூபாய் என்ற லெவலில் வாங்கி வைக்கலாம். ஸ்டாப் லாஸ் 460 ரூபாய் என்ற லெவலை வைத்துக் கொள்ள நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ்

டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ்

டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் நிறுவனத்தின் இலக்கு விலையானது 4470 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, டெக்னிக்கலாக இந்த பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பங்கின் விலையானது 20 நாள் மூவிங் ஆவரேஜ்-க்கு மேலாகவும், ஆர்.எஸ். ஐ 14 நாட்களுக்கு மேலாகவும் உள்ளது. ஆக உடனடியாக இப்பங்கின் விலையானது ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இப்பங்கினை 4020 – 4050 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம். இதன் ஸ்டாப் லாஸ் 3840 ரூபாயாகும்.

4 பங்குகள் பரிந்துரை

4 பங்குகள் பரிந்துரை

இது தவிர சாம்பல் ஃபெர்டிலைசர்ஸின் இலக்கு விலை 450 ரூபாயாக நிர்ணயித்துள்ளனர்.

ஓபராய் ரியால்டி நிறுவனத்தின் பங்கு விலை இலக்கு 980 ரூபாயாகவும், ஐடி நிறுவனமான டெக் மகேந்திரா நிறுவனத்தின் பங்கு இலக்கு விலை 1600 ரூபாயாக நிபுணர்கள் கணித்ர்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

tech mahindra, Oberoi realty among 7 short term stock picks for strong returns

tech mahindra, Oberoi realty among 7 short term stock picks for strong returns/மீடியம் டெர்மில் நல்ல லாபம் கொடுக்க கூடிய 7 பங்குகள்.. நிபுணர்களின் சூப்பர் பரிந்துரை

Story first published: Tuesday, March 22, 2022, 8:30 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.