இஸ்லாமாபாத்
உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் மீது வளரும் வெறுப்பை தடுக்க இஸ்லாமிய நாடுகள் தவறி விடடதாக பாகிஸ்தான் பிரதம்ர் இம்ரான் கான் கூறி உள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்துக் கொண்டார்.
அவர் தனது உரையில்,
“இஸ்லாமிய சமயத்தில் மிதவாதம், தீவிரவாதம் என எதுவும் இல்லை. தீவிரவாதத்துக்கும் மத நம்பிக்கைக்கும் எந்தவிதத்திலும் தொடர்பும் இல்லை. மேற்கத்திய நாடுகள் இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு மிதவாத மற்றும் தீவிர முஸ்லிம்கள் என எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்க முடியும்?
எனது வாழ்நாளின் பெரும்பகுதியை நான் இங்கிலாந்தில் செலவிட்டுள்ளேன், உலகம் முழுவதும் சர்வதேச விளையாட்டு வீரராக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். எனவே நான் பெரும்பாலான மக்களை விட மேற்கத்திய நாகரீகத்தை நன்றாகப் புரிந்துகொள்கிறேன்.
அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலுக்குக்குட பிறகு முஸ்லிம்கள் மீதான வெறுப்பு வளர்ந்து வருவதை நான் காண்கிறேன். இது தொடர்ந்து வளர்ந்து வருவது வருதத்தை தருகிறது. இத்தகைய தவறான கட்டுக்கதையைச் சரி செய்ய இஸ்லாமிய நாடுகள் எதுவும் செய்யவில்லை. மதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும்?
இஸ்லாமியர்களைப் பயங்கரவாதத்துடன் சமப்படுத்தப்பட்டு தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. நாம் துரதிர்ஷ்டவசமாக இந்த தவறான பிரச்சாரத்தைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. இஸ்லாமிய நாடுகளின் தலைவர் இது குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்.”
எனத் தெரிவித்துள்ளார்.