ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலசா ரயில் நிலையத்தில், கரடி ஒன்று சுற்றித் திரிந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை பகுதியில் நேற்றிரவு கரடி சுற்றித் திரிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
வனத்துறையினர் வருவதற்குள் அந்த கரடி அங்கிருந்து மாயமான நிலையில், அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் கரடி சுற்றித்திரிந்ததை அங்கிருந்த பயணிகள் சிலர் வீடியோ எடுத்து வெளியிட்ட நிலையில், அது வைரலாகி வருகிறது.