வாஷிங்டன்: குவாட் அமைப்பில் இடம்பெற்றிருக்கும் நாடுகளில் ரஷ்யாவை எதிர்ப்பதில் இந்தியா சற்று நடுக்கம் காண்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் குரல் கொடுத்து வந்தாலும், இந்த விவகாரத்தில் இரு நாட்டுகளுடனும் நல்லுறவை பேண இந்தியா நடுநிலை வகிக்கிறது. ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது இந்தியா பொது ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. இதற்கிடையே ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
இந்தியாவை தவிர்த்து குவாட் அமைப்பில் உள்ள நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை சுட்டிக்காட்டும் விதமாக அமெரிக்காவில் வணிக தலைவர்களிடையே அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உரையாற்றுகையில், ‛குவாட் அமைப்பில் இடம்பெற்றிருக்கும் நாடுகளில் ரஷ்யாவை எதிர்ப்பதில் இந்தியா சற்று நடுக்கம் காண்கிறது. ரஷ்யாவை ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் வலுவாக எதிர்க்கின்றன. ரஷ்யாவுக்கு எதிரான கூட்டணியில் இந்தியா இடம்பெறவில்லை’ எனத் தெரிவித்தார்.
Advertisement