டேராடூன்: உத்தரகாண்டில் இளைஞர் ஒருவர் ராணுவத்தில் சேரும் தனது லட்சியத்திற்காக, தினமும் இரவு வேலை முடிந்து 10.கி.மீ தூரத்திற்கு ஓடியபடி தனது வீட்டிற்கு செல்லும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிவிட்டரில் அவரது வீடியோ வெளியாகி இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார். உத்தரகாண்டில் அல்மோரா பகுதியை சேர்ந்தவர் பிரதீப் மேக்ரா(19). நேற்று முன்தினம் வரை யாரென்றே தெரியாத பிரதீப் மேக்ரா, சினிமா தயாரிப்பாளர் வினோத் காப்ரி சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ மூலமாக ஒரே நாளில் பிரபலமாகியுள்ளார். இந்த வீடியோவில், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் செக்டார் 16 பகுதியில் சாலையோரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் மேக்ராவுடன், வாகனத்தில் பயணித்தபடியே வினோத் உரையாடிக்கொண்டு வருகின்றார். தினமும் இரவு வேலை முடிந்த பின் மேக்ரா வீட்டிற்கு செல்வதற்கு பேருந்து, ஆட்டோ, பைக், சைக்கிள் என எதனையும் இவர் பயன்படுத்துவதில்லை. மாறாக, வேலைசெய்யும் இடத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள தனது வீட்டிற்கு ஓடியே வருகின்றார். இதனை பலமுறை கவனித்துள்ள தயாரிப்பாளர் வினோத் காப்ரி அவரிடம் வாகனத்தில் பயணித்தபடியே பேசுவதை வீடியோ எடுத்து டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில்,வினோத் காப்ரி: ஏன் ஓடியபடி போகிறாய்?மேக்ரா: எப்பொழுதும் என் வீட்டிற்கு நான் ஓடி தான் செல்வேன்வினோத் காப்ரி: எதற்காக ஓடுகிறாய்?மேக்ரா: ராணுவத்தில் சேர.வினோத் காப்ரி: உன் பெயர் என்ன?மேக்ரா: பிரதீப் மேக்ராவினோத் காப்ரி: சொந்த ஊர்?மேக்ரா: உத்தரகண்ட் அல்மோராவினோத் காப்ரி: நீ ஏன் காலை நேரத்தில் ஓடக்கூடாது?மேக்ரா: காலையில் எனக்கு வேலை இருக்கும். சமைக்கவே நேரம் சரியாக இருக்கும்வினோத் காப்ரி: உன் வயது என்ன?மேக்ரா: 19வினோத் காப்ரி: உன் பெற்றோர் எங்கே?மேக்ரா: வீட்ல இருக்காங்க, அம்மா மருத்துவமனையில இருக்காங்க…வினோத் காப்ரி: நீ யாருடன் தங்கியிருக்கிறாய்?மேக்ரா: என் சகோதரருடன்வினோத் காப்ரி: ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீட்டர் ஓடுகிறாய்?மேக்ரா: 10 கி.மீ. வினோத் காப்ரி: ஓ மை காட்.. எப்ப சாப்பிடுவ?மேக்ரா: வீட்டிற்கு போனதும் சமைத்து சாப்பிட வேண்டும்வினோத் காப்ரி: இன்னிக்கு என் கூட வந்து டின்னர் சாப்பிடுமேக்ரா: இல்லை என் சகோதரன் வீட்டில் காத்துக்கொண்டிருப்பான்வினோத் காப்ரி: உன் சகோதரன் சமைத்துக் கொள்ள மாட்டாரா?மேக்ரா: அவன் நைட் டூட்டி பார்க்கிறான்வினோத் காப்ரி: நான் உன்னை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன். நான் உன்னைய வீட்ல டிராப் பண்ணுறேனேமேக்ரா: இது எனது தினசரி பயிற்சி… அப்படி பண்ணா என் பயிற்சி பாதிக்கப்படும். வேண்டாம்வினோத் காப்ரி: ஆல்தி பெஸ்ட் பிரதீப்என பேசுகிறார். குடும்ப கஷ்டத்திலும் ராணுவத்தில் சேர வேண்டுமென தனது லட்சியத்திற்காக மேக்ரா தினசரி 10 கிமீ ஓடுவது பலரையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் டியோ, பிரதீப் மேக்ரா ராணுவத்தில் சேருவதற்கு உதவுவதற்கு முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், பிரதீப்பின் செயல் பாராட்டுக்குரியது. அவரது தகுதியின் அடிப்படையில் ராணுவ ஆட்சேர்ப்பு தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பல பிரபலங்களும் மேக்ராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.* நாட்டுக்காக உழைப்பேன்வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வினோத் காப்ரி மீண்டும் நேற்று பிரதீப் மேக்ராவிடம் பேசிய மற்றொரு வீடியோவை வெளியிட்டார். அதில் பிரதீப் மேக்ரா பேசுகையில், ‘‘வீடியோ வைரலானதை பார்த்தேன். அதை சிலர் விமர்சித்தும் இருக்கிறார்கள். நான் காஷ்மீருக்கு சென்று ஓட வேண்டும் என்கிறார்கள். சிலர் எனக்கு உதவுவதாகவும், நான் ஓடுவதை நிறுத்த வேண்டும் என்றார்கள். ஆனால் நான் எப்போதும் ஓடிக் கொண்டிருப்பேன். இந்த நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நாட்டுக்காக நான் ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்ய விரும்புகிறேன்’’ என கூறி உள்ளார்.