கோலாலம்பூர்,
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடம் வகித்து வந்த இந்தியாவின் லக்ஷயா சென் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம், மீண்டும் டாப் 10க்குள் நுழைந்தார். அவர் தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசையில் 9வது இடம் வகிக்கிறார்.
முன்னதாக 20 வயதான அவர், ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் பங்கேற்கும் இந்தியாவை சேர்ந்த 5வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இப்போது அவர் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 74,786 புள்ளிகளுடன் 9வது இடம் பிடித்துள்ளார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் சிராக் ஷெட்டி – ராங்ஜிரெட்டி ஜோடி 7வது இடத்துக்கு மும்மேறியுள்ளனர்.
பெண்கள் இரட்டையர் பிரிவில், காயத்ரி கோபிசந்த் – ட்ரெசா ஜோலி ஜோடி 34 வது இடத்துக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.