வெளியான செய்தியால் பெரும் அதிர்ச்சியில் டிடிவி தினகரன்.!

உதவித்தொகையை உயர்த்திகேட்டு போராடுவதற்காகச் சென்னை வந்த மாற்றுத் திறனாளிகளை பல இடங்களில் தடுத்து நிறுத்தி, கைது செய்வதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “உதவித்தொகையை உயர்த்திகேட்டு போராடுவதற்காகச் சென்னை வந்த மாற்றுத் திறனாளிகளை பல இடங்களில் தடுத்து நிறுத்தி, கைது செய்வதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 

தி.மு.க.அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுளின் குழந்தைகளான மாற்றுத் திறனாளிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர நினைக்காமல் மனசாட்சியின்றி காவல் துறையை வைத்து அவர்களை அலைக்கழிப்பது சரியானதா?” என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார் 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.