10 ஆயிரம் ஸ்கொயர் ஃபீட்டில் வலிமை போஸ்டர்… அசத்தலாய் அறிவித்த ஜீ5!

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்
வலிமை
. கடந்த மாதம் 24 ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூலையும் வாரி குவித்தது.

இந்நிலையில் இப்படம் ஓடிடி தளமான ஜீ5ல் வரும் 25 ஆம் தேதி ஒளிப்பரப்பாகிறது. இதற்கான ப்ரமோஷன் பணிகள் தீயாய் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வலிமை ரிலீஸ் தேதியை ஒய்எம்சிஏ மைதானத்தில் 10000 சதுர அடியில் போஸ்டர் வெளியிட்டு ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது.

வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்திருந்தார். ஆக்ஷன் பேக்டு படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய போதும் இந்தி பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக சோபிக்கவில்லை.

அஜித் மச்சினிச்சிய இந்த மாதிரி பாத்ருக்கிங்களா? வேற லெவல் போட்டோஸ்!

இதற்கு காரணம் சரியாக புரமோஷன் பணிகளை மேற்கொள்ளவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில்
ஜீ 5
ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் இப்படத்திற்கு மாஸாக புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே அஜித், ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் ஆகிய மூன்று பேரும் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உ பி யில் இருக்கும் வெறித்தனமான ரஜினி ரசிகர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.