137 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னை

ன்று முதல் 137 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிபபு ஆகியவற்றின் அடிப்படையில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது.  ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாகக் கடந்த சில மாதங்களாக விலை உயராமல் இருந்தது.

தேர்தல்கள் முடிந்த பிறகு மொத்தமாக டீச்ல் டாங்கர் லாரி மூலம் டீசல் கொள்முதல் செய்வோருக்கு லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டது.  இதனால் மொத்தமாக டீசல் கொள்முதல் செய்யும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கவலை அடைந்தனர்.  தவிர வீட்டு உபயோக எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 உயத்தப்பட்டுள்ளது.

மக்கள் மேலும் துயரடையும் வகையில் இன்று முதல் சில்லறை விலை பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் 137 நாட்களுக்குப் பிறகு உயர்த்தப்பட்டுள்ளது.    சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.0.76 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.102.16க்கு விற்கப்படுகிறது.  டீசல் விலையும் ரூ.0.76 காசுகள் உயர்ந்து ரூ.92.19க்கு விற்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.