இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றது.
உக்ரைன் ரஷ்ய பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டுள்ள நிலையில், தொடர்ந்து அது சர்வதேச பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது.
இதற்கிடையில் கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தையானது சரிவில் முடிவடைந்துள்ள நிலையில், இன்று ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. எனினும் இந்திய சந்தையானது இன்று சற்று சரிவிலேயே காணப்படுகின்றது.
பெட்ரோல், டீசல், எல்பிஜி விலை உயர்வு சாமானிய மக்களை எப்படியெல்லாம் பாதிக்கும்..?!
முதலீடுகள் வெளியேற்றம்
மார்ச் 21 நிலவரப் படி, அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக முந்தைய இரண்டு நாளாக பங்குகளில் முதலீடுகளை அதிகரித்த நிலையில், கடந்த அமர்வில் மீண்டும் 2962.12 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள், 252.91 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 128.28 புள்ளிகள் குறைந்து, 57,420.77 புள்ளிகளாகவும், நிஃப்டி 112.70 புள்ளிகள் குறைந்து,17,004.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 135.42 புள்ளிகள் குறைந்து, 57,157.07 புள்ளிகளாகவும், நிஃப்டி 29.10 புள்ளிகள் குறை17,088.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1066 பங்குகள் ஏற்றத்திலும், 758 பங்குகள் சரிவிலும், 99 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பல குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள்,பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவிலும், பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ ஸ்மால் கேப் உள்ளிட்ட குறியீடுகள் சற்று சரிவிலேயே காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி, ரிலையன்ஸ், ஐஓசி, பிபிசிஎல், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.யு.எல், நெஸ்டில், பிரிட்டானியா, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், பவர் கிரிட் கார்ப், டாடா ஸ்டீல், டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாக உள்ளன. இதே ஹெச்.யு.எல், ஆக்ஸிஸ் வங்கி, நெஸ்டில், எஸ்பிஐ, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது நிலவரம்
தற்போது 10.22 மணி நிலவரப்படி, தற்போது சென்செக்ஸ் 240.48 புள்ளிகள் குறைந்து, 57036.01 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 71.75 புள்ளிகள் குறைந்து, 17,045.85 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில் ஏற்ற இறக்கம் தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
opening bell: sensex, nifty trade lower amid volatility
opening bell: sensex, nifty trade lower amid volatility /2வது நாளிலும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. பெரும் ஏமாற்றம்.. இனியாவது ஏற்றம் காணுமா?