2 வருடங்களில் பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக மின்சார வாகனம் விலை குறையும் : அமைச்சர் உறுதி

டில்லி

மின்சார வாகனங்களின் விலை பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக 2 வருடங்களில் குறையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைநகர் டில்லி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக, டாக்கா (வங்கதேசம்), ஜமேனா (சாட்), துஷான்பே (தஜிகிஸ்தான்) மற்றும் மஸ்கட் (ஓமன்) ஆகிய நகரங்கள் உள்ளன.  இந்த தகவல்கள் 2021 உலக காற்று தர அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவையில் 2022-23ஆம் ஆண்டுக்கான சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கான மானியங்களுக்கான கோரிக்கைகள் குறித்து மக்களவையில் பதிலளித்த அமைச்சர் நிதின் கட்கரி ”குறைவான செலவு கொண்ட உள்நாட்டு எரிபொருளுக்கு மாற வேண்டியதன் அவசியத்தால் விரைவில் மின்சார வாகனங்கள் பெருமளவில் நடைமுறைக்கு வரும்.

மேலும் மின்சார வாகனங்களின் விலை இன்னும் 2 வருடங்களில் பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக ஆகும்.  மின் வாகனங்கள் பெருமளவுக்கு மாசு அளவைக் குறைக்கும்.  இதனால் மாசுபாட்டால் மிகவும் அதிகப்படியாகப் பாதிக்கப்பட்டுள்ள டில்லியின் ஒட்டுமொத்த நிலைமையும் மேம்படும்” என்று  கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.