4 தோல்விக்கு பிறகு முதல் வெற்றி.. விரக்தி அடைந்த கே.எல்.ராகுல்.. என்ன காரணம்? மேலும் செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய 8 அணிகள் மோதுகின்றன. லீக் ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள பாகிஸ்தான் மகளிர், 4 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வந்தது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 8 விக்கெட் வித்திாயசத்தில் வென்றது. இந்தத் தொடரில் அந்த அணி பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும். மழை காரணமாக 20 ஓவர்கள் ஆட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பயோ-பபிளில் இருப்பது கடினமாக இருக்கிறது: கே.எல்.ராகுல் விரக்தி

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல். ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த இவர் இந்த ஆண்டு லக்னோ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 26 ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து வீரர்களும் பயோ-பபிளில் இருக்கின்றனர்.

பயோ-பபிளில் இருப்பது குறித்த கடின நேரங்கள் குறித்து கே.எல்.ராகுல் மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது :

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. அதனால் நாம் இதில் இருந்து தான் ஆக வேண்டும் என பயோ-பபிள் அறிமுகமான ஆரம்ப நாட்களில் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். குறிப்பாக குடும்பத்தை அதிகமாக தேடுகிறோம். நமது குடும்பமும், நண்பர்களும் தான் நம்மை இயல்பாக உணரச் செய்வார்கள் . ஆனால் நாங்கள் தூங்குகிறோம், எழுகிறோம், பயிற்சி செய்கிறோம். இது தான் தினமும் தொடர்கிறது என்றார் ராகுல்.

பள்ளி நாட்களில் நிறைய சண்டை போட்டிருக்கிறேன்: கம்பீர்

பள்ளி நாட்களில் நிறைய சண்டையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர். இவர் நீண்ட காலம் தோனி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

இந்தியாவின் இரண்டு உலக கோப்பை தொடர்களிலும் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த நிலையில் தற்போது அவர் தனது பள்ளிநாட்களை நினைவு கூர்ந்து பேசிய அவர், ‘நான் பள்ளியில் நிறைய சண்டை போட்டு இருக்கிறேன். 12 ஆம் வகுப்பு படிக்கும்போது பள்ளி இறுதி நாளில் , அனைத்து மாணவர்களும் பள்ளிக்குச் செல்ல விரும்பும்போது நான் ரஞ்சி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தேன்’ என்றார் அவர்.

வைரலாகி வரும் வீடியோவை பகிர்ந்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

உத்தரகாண்டின் பரோலா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் மெஹ்ரா (வயது 19). இவர் தன்னுடைய வீட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். பணி முடிந்து வீடு திரும்ப இரவாகி விடுகிறது.

ஆனால், மற்றவர்களை போன்று வாகனம், பேருந்து வசதிகளை பிரதீப் பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக, பணி முடிந்ததும் இரவில், நொய்டா சாலையில் 10 கி.மீ. தூரம் ஓடியே வீட்டை அடைகிறார்.

ராணுவத்தில் சேர்வதற்காக தான் ஓடுவதாகவும் காலையில் தினமும் 8 மணிக்கு எழுந்து, பணிக்கு செல்வதற்கு முன் உணவு சமைக்க வேண்டும் என்பதால் காலையில் தன்னால் பயிற்சி மேற்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: நடாலை வீழ்த்திய இளம் வீரர்! தங்க ஷூ விருது வென்ற ஐ.எஸ்.எல். வீரர்.. மேலும் செய்திகள்

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “இன்றைய காலை பொழுதை இது சிறப்பாகியுள்ளது ! என்ன ஒரு மனிதர் !” என பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.