பொதுவாக மூட்டுவலி என்பது முன்பெல்லாம் முதியவர்களைப் பாதிக்கும் பிரச்னையாக இருந்தது.இப்போதோ இளம்வயது பிரச்சினையாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
உடல் உழைப்பு குறைந்து வருவதும் உடற்பயிற்சி இல்லாததும் இதற்கு முக்கியக்காரணங்கள் ஆகும்.
இவற்றை எளியமுறையில் ஒரு சூப்பரான வழிமுறை ஒன்றை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:-
- நல்லெண்ணெய் – 200 மி.லி
- கடுகு எண்ணெய் – 200 மி.லி
- வேப்ப எண்ணெய் – 200 மி.லி
- விளக்கெண்ணெய் – 200 மி.லி
- தேங்காய் எண்ணெய் – 200 மி.லி
- சுக்கு – 50 கிராம்
- மிளகு – 50 கிராம்
- நொச்சி இலை – 100 கிராம்
- இலுப்பை எண்ணெய் – 100 கிராம்
- அருகம்புல் – 100 கிராம்
செய்முறை
அடுப்பில் ஒரு பானையை வைத்து 200 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும், பின் 200 மி.லி வேப்பெண்ணெயை ஊற்றி சிறிது நேரம் சூடேற்றவும்.
பிறகு 200 மி.லி கடுகு எண்ணெயை ஊற்றி 1 நிமிடம் சூடேற்றி அதனுடன் 200 மி.லி நீரடி முத்துக்கொட்டை எண்ணெய் ஊற்றி 2 நிமிடம் சூடேற்றி பின்பு 200 மி.லி தேங்காய் எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் சூடேற்றி இறக்கி விடவும்.
50 கிராம் சுக்கையும், 50 கிராம் மிளகையும் நன்றாக இடித்து கொள்ளவும். 100 கிராம் இலுப்பை கொட்டையை பச்சையாக கொண்டு வந்து இடித்து கொள்ளவும்.
100 கிராம் அருகம்புல்லையும், 100 கிராம் நொச்சி இலைகளையும் பச்சையாக கொண்டு வந்து சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
பிறகு இவை அனைத்தையும் தைல பானையில் போட்டு மீண்டும் சிறிது நேரம் தீயில் வைத்து சூடேற்றவும். தைல பதத்தில் வரும் போது இறக்கி வடிகட்டி தைலத்தை கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும்.