iQOO Sale: அமேசான் தளத்தில் கிடைக்கும் Clone போன்!

BBK நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் விவோவின் சப்-பிராண்டான iQOO இந்தியாவில் புதிய
iQOO Z6 5G
ஸ்மார்ட்போனை இன்று
Amazon India
தளத்தில் விற்பனைக்குக் கொண்டு வருகிறது.

புதிய ஐக்யூ இசட் 6 ஸ்மார்ட்போனில் 5ஜி இணைப்பு, 50 மெகாபிக்சல் கேமரா, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகிய அம்சங்கள் இருக்கிறது. புதிய
ஐக்யூ இசட் 6 5ஜி
ஸ்மார்ட்போன் 4GB ரேம் + 128GB மெமரி, 6 ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி, 8GB ரேம் + 126GB மெமரி ஆகிய மூன்று வேரியண்டுகளில் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.

ஐக்யூ இசட் 6 5ஜி அம்சங்கள் (iQOO Z6 5g full specification)

iQOO Z6 ஸ்மார்ட்போன் 6.58″ அங்குல முழு அளவு எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி தொடுதிரையைக் கொண்டுள்ளது. இது 2408×1080 பிக்சல்கள், 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. 240Hz ஹெர்ட்ஸ் டச் சேம்பிளிங் ரேட் இந்த டிஸ்ப்ளேயில் உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி (Snapdragon 695 5G) சிப்செட் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் திறனுட்டப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதள அடிப்படையிலான பன் டச் 12 (FunTouch OS 12.0) ஸ்கின் கொண்டு விவோ டி1 ஸ்மார்ட்போன் இயங்குகிறது. இந்த போனில் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற அம்சங்களை இந்த போன் பெற்றுள்ளது.

என்ன பண்ணி வெச்சிருக்கீங்க iQOO; மண்ட மேல கொண்ட தெரியுது!

ஐக்யூ இசட் 6 5ஜி கேமரா (iQOO Z6 5g camera)

ஐக்யூ இசட் 6 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்களைக் கொண்ட அமைப்புள்ளது. 50MP (f/1.8) மெகாபிக்சல் Samsung ISOCELL JN1 முதன்மை சென்சார், 2MP மெகாபிக்சல் (f/2.4) டெப்த் சென்சார், 2MP மெகாபிக்சல் (f/2.4) மேக்ரோ சென்சார் ஆகிய மூன்று கேமராக்கள் உள்ளது. செல்பிக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக எடுக்க 16 மெகாபிக்சல் (f/2.0) கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இணைப்பு அம்சங்களைப் பொருத்தவரை 11 band 5G, Wi-Fi, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் (GPS), USB Type-C போர்ட் ஆகியவை ஐக்யூ இசட் 6 5ஜி போனில் உள்ளது. ஸ்மார்ட்போனை இயக்க 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை ஊக்குவிக்க 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பாக்ஸ் உடன் சார்ஜிங் அடாப்டர் வருகிறது.

ஐக்யூ இசட் 6 5ஜி விலை (iQOO Z6 price in India)

இந்த ஸ்மார்ட்போன் டைனமோ பிளாக், குரோமேட்டிக் ப்ளூ ஆகிய இரு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் 4ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.15,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முறையே 6ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.16,999 ஆகவும், 8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.19,999 என்றும் விற்பனைத் தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.

Amazon ஷாப்பிங் தளம் அல்லது சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளலாம். கூடுதல் கேஷ்பேக் ஆஃபர்களும் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படுகிறது.

Read more:
வீட்டிலேயே தியேட்டர் அனுபவம் – Redmi வெளியிட்ட 100 இன்ச் ஸ்மார்ட் டிவி!64MP OIS கேமரா; 5nm புராசஸர் – புதிய Samsung கேலக்ஸி ஏ53 5G முன்பதிவு தொடக்கம்!குறைந்த விலை Oppo A16e ஸ்மார்ட்போன் அறிமுகம் – முழு விவரங்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.